வார்த்தை வழிகாட்டட்டும், வாழ்க்கை வெளிச்சமாகட்டும்

வாருங்கள், வேதம் கற்போம். தகவல் அறிவிற்காக மாத்திரம் அல்ல. தர்க்கத்திற்காகவும் அல்ல. நம் வாழ்க்கை தாக்கத்திற்காக.

Holding Bible in Hand

எங்களைப் பற்றி

வேதம் கற்போம்! இது ஒரு வெற்று கோஷம் அல்ல. இது ஒரு அழைப்பு. ஒரு போர் குரல்.
வேதத்தின் சத்தத்திற்கு மீண்டும் செவிக்கொடுக்க தேவ ஜனத்துக்காக ஏறெடுக்கப்படும் ஓர் அறைகூவல்.
தமிழ் மண்ணில் இந்த தலைமுறையில் தேவனுக்கேற்ற ஒரு பலிபீடத்தை ஒவ்வொரு கல்லாக கட்டியெழுப்ப முழங்கும் ஓர் சங்கு.

எம் வாஞ்சை என்ன?

பஞ்சத்தில் பஞ்சமாம் வார்த்தை பஞ்சம் தமிழகத்தில் வராதிருக்க வேண்டும். நம் தமிழகம் வேத சத்தியத்தின் மேய்ச்சல் நிலமாய் தொடரவேண்டும். இங்கு தண்ணீர் நிற்காத வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டவர்கள் ஜீவ நதிகரையில் நடப்பட வேண்டும்.

ஆகவே தான்: வேதம் கற்போம்.
இது ஒரு வேத பாடசாலை — இங்கே கிறிஸ்துவே பாடத்திட்டம், ஆவியானவரே ஆசிரியர், சிலுவையே கரும்பலகை.

Man Reading Bible

நாங்கள் என்ன செய்கிறோம்

வேதத்தின் அடிப்படையிலான உண்மைகளை எளிமையாகவும், தெளிவாகவும் பல ஊடகங்கள் மூலமாக பகிர்கிறோம்.

யூடியூப் காணொளிகள்
சமூக ஊடகங்கள்
வலைப்பதிவுகள்

நிறுவனரைப் பற்றி

திரு. ஜான் பிரெட்ரிக் டேவிட்

சென்னையில் ஒரு வேதாகம கல்லூரியில் புதிய ஏற்பட்டு துறையில் விரிவுரையாளராக பணியாற்றும் நான், வேதத்தின் ஒரு தீவிர மாணவன். வேதத்தின் சத்தியத்தை என் தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைகளுக்கும் கற்றுத்தரும் அழைப்பில் பயணித்து வருகிறேன்.

திரு. ஜான் பிரெட்ரிக் டேவிட்

வலைப்பதிவுகள்

செல்போனில் வேதவசனம் வாசிக்கலாமா?

இன்று கிறிஸ்தவ சமுதாயத்தில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. “அச்சிடப்பட்ட வேதாகம புத்தகமே திருமறையாகும்; செல்போன்/டேப்லெட் வேதாகம ஆப் உபயோகத்திற்கு உகந்ததல்ல”…

மேலும் வாசிக்க

ஆராதனை யாருக்கு?

இன்றைய காலகட்டத்தில் பலர், “இன்றைய ஆராதனை எனக்குப் பிடித்திருந்தது” அல்லது “ஆராதனை நன்றாக இல்லை” என்று சொல்கிறார்கள். இவை சாதாரண…

மேலும் வாசிக்க

கேள்விப் பெட்டி

இந்தப் பகுதி நிரப்பப்பட வேண்டும்
This field is required.
This field is required.